ஒவ்வொரு
மனிதனுக்குமான
வெவ்வேறு
விதமான
அழைப்பிதழ்களோடு
விடிகிறது
காலை...
எல்லாப்
பூக்களும்
மகரந்தங்கள்
தளும்ப...
தத்தம்
அழைப்பிதழ்களை
விநியோகித்துக்
கொண்டிருக்கின்றன...
ஒவ்வொரு
அழைப்பிதழிலும்
வெட்கத்தின்
வியர்வைத்துளிகள்
இதழ்களைத்
தொட்டும்
தொடாமலும்...
பூக்கள்
பூத்துக்குலுங்க
புன்னகைக்கிறது
இதழ்...
இதழ்களில் தேன் தடவிப்
பூரிக்கின்றன
மகரந்தங்கள்...
நீ
அழும்
மழலை
என்னிடம்
காதல்
உறிஞ்சிக்குடிக்கிறாய்....
உண்மைதான்...
தித்திக்கும் தேன் சொரிந்தபடி
எனக்கான
அழைப்பிதழ்களுடன்
நீ
அமைதியாய்க்
காத்துக்கொண்டிருக்கிறாய்....
உன் அழைப்பிதழை
நான் விரும்பவில்லை...
நீ அழையா விருந்தாளி
நான்...


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக