வெளிச்சொல்லவியலாத
முடிந்தும் முடியாத பல
முடிச்சுகளை
அவிழ்க்க முனைகிறது மனம்..
உனக்கெனவே உயிர்வாழும்
இந்த இதயக்கதவுகளைத்
தட்டித் திறக்கமுனையும்
உன் மைவிழிப்பார்வை...
தரிசிக்க வழியற்று
இன்னமும் மூடப்பட்ட
கதவுகளுடன்
உன் வருகைக்கென ஏங்கும்
இந்தக் கருவறை...
உன்
நினைவுகளால் பின்னப்பட்ட
நரம்புமண்டல முடிச்சுகள்
அவிழ்ந்தும் அவிழாத
கூந்தல் முடிச்சென
திகைத்தபடி...
எங்கெங்கோ
அலைந்து திரிந்துவிட்டு
கடைசியில் உன்
நினைவுக் கூண்டினுள்
அடைபட்டு
நிம்மதி நாடுகிறது மனம்...
குட்டியை
மடியில் கட்டிக்கொண்டு
கிளைவிட்டுக் கிளைதாவும்
குரங்கென உன்
நினைவுகளை நெஞ்சில் சுமந்தபடி
இங்குமங்கும் அலைபாய்கிறது வாழ்க்கை...
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக