முற்றுப்பெறாத இந்தக்
காதல் அத்தியாயத்தில் சிக்கித்திணறிக்கொண்டிருக்கிறது
வாழ்க்கை...
காதல் வீதியில்
எதிரெதிர் வீட்டில்தான்
நீயும் நானும்...
உடைந்து கிடக்கும்
பிறை வளையலாய் நிலவு...உடைந்த நிலவின்
நொறுங்கிய துகள்களாய்
விண்மீன் கிறுக்கல்கள்...
நொறுங்கிய இந்த
இதயச் சில்களைக்
காதல் நூல்கொண்டு
கோர்க்க முனைகிறேன்...
தென்றலில் தத்தளிக்கும்
சிறகுபோல உன்னிடம் சிக்கித்தத்தளிக்கிறது காதல்..
பெண்மைத்தாழிட்டுப்
பூட்டித்தான் கிடக்கிறதுஉன் காதல்க் கதவு...
முகம்காண ஏங்கி
முற்றச்சிறையிலடைகின்றேன்...
கைகொட்டிச் சிரிக்கிறது நிலவு...
நான் அழுவதா...? சிரிப்பதா..?
விசும்பல்களோடே
அஸ்தமிக்கிறது கிழமை...
மூலச்சிறைக்குள் அடைபடுகிறேன்..
முனகலுடன் மூடிக்கொள்(ல்)கிறது
என் இதயக்கதவு...
மென்மையாய்த்தன் இருபுறக்
கதவுகளையும் தட்டிப்பார்த்துதிருப்தியடைந்துகொள்கிறது
காதல்... நீயோ...
பலமுறை தட்டியும் திறக்காத கதவுகளிடை
சாளரம் மட்டும் திறந்து
வேவுபார்க்க முனைகிறாய்...